| ADDED : செப் 17, 2026 05:33 PM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மக்கள் அனைவரும் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் உள்ள குப்பைகளை ஈர கழிவு, உலர்கழிவு, சுகாதார கழிவு, சிறப்பு கழிவு என நான்கு வகைகளாக தரம் பிரித்து, அக்.1 முதல் வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி வழங்காதவர்கள் வீடுகளில் இருந்து குப்பைகள் சேகரம் செய்யப்பட மாட்டாது. எனவே அனைவரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்கி ஒத்துழைக்க வேண்டுமென வத்திராயிருப்பு பேரூராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.