நிலவேம்பு கஷாயம் வழங்கல்
விருதுநகர்: காரியாப்பட்டியில் காவை தென்இந்திய கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் சார்பில் வைரஸ் காய்ச்சலை எதிர்கொள்ள நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. இதில் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், சங்க மாநில தலைவர் பாண்டியன், பொதுச் செயலாளர் முருகேசன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.