மேலும் செய்திகள்
வீணாகும் தாமிரபரணி குடிநீர் சீரமைக்க எதிர்பார்ப்பு
21 hour(s) ago
கல்லுாரியில் கருத்தரங்கம்
21 hour(s) ago
ராஜபாளையத்தில் அனுமன் ஜெயந்தி
21 hour(s) ago
காரியாபட்டி : 3 ஆண்டுகளுக்கு மேல் வராத தாமிரபரணி குடிநீர், படுமோசமாக இருக்கும் மயான சாலை, சேதம் அடைந்து கிடக்கும் சுகாதார வளாகம், பள்ளத்தில் இருக்கும் நிழற்குடை என காரியாபட்டி நாசர் புளியங்குளம் மக்கள் சிரமத்தில் உள்ளனர்.காரியாபட்டி நாசர் புளியங்குளத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மெயின் ரோட்டில் உள்ள நிழற்குடை பள்ளத்தில் உள்ளது. மழை நேரங்களில் மழைநீர் தேங்கி பயன்படுத்த முடியவில்லை. பயணிகள் ஏறி இறங்க முடியவில்லை. மயானத்திற்கு செல்லும் ரோடு ஜல்லிக்கற்களாக உள்ளன. இறப்பு சமயத்தில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குடிநீர் பிரச்னையை போக்க தாமிரபரணி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. 2 மாதங்கள் மட்டுமே வந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு மேல் தண்ணீர் வரவில்லை. குடிநீருக்கு பெரிதும் சிரமப்படுகின்றனர்.கண்மாய் கரையில் உள்ள நீர்வரத்து ஓடை பாலம் சேதமடைந்து எப்போது இடிந்து விழுமோ என்கிற நிலை உள்ளது. பள்ளி கட்டடத்தில் மேல் தளத்தில் தட்டு ஓடு பதிக்காததால் மழை நேரங்களில் நீர் கசிவு ஏற்படுகிறது. ரேஷன் கடை, சமுதாயக்கூடம் இல்லை. காலனி வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இரவு நேரத்தில் பஸ்சிலிருந்து இறங்கி ஊருக்குள் செல்ல இருளாக இருப்பதால் அச்சம் ஏற்கிறது. தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago