உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / த.வெ.க., எப்போதும் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்காது மாணிக்கம் தாகூர் எம்.பி.,

த.வெ.க., எப்போதும் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்காது மாணிக்கம் தாகூர் எம்.பி.,

விருதுநகர்: பா.ஜ.,வுடன் எப்போதும் கூட்டணி வைக்கப்போவதில்லை என விஜய் தெளிவாக தெரிவித்துவிட்டார்', என விருதுநகரில் எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் பா.ஜ.,வின் அடிமையாக தற்போது உள்ளது. மகாராஷ்ராவில் சிவசேனா உடைந்தது போல முன்னாள் அமைச்சர் வேலுமணி அ.தி.மு.க.,வை உடைத்து தனியாக செல்லபோகிறார் என்றும், இதற்கு உறுதுணையாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இருக்கிறார் என செய்தி வெளியாகிறது. இதற்கு ராஜேந்திர பாலாஜி பதில் சொல்ல வேண்டும்.முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் நாகரீகமாக பேசக் கூடியவர். அவர் த.வெ.க., தலைவர் விஜய் கட்சி துவங்கியதற்கும், போராட்டம் வெற்றி பெறவும் மட்டுமே வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பார். இதற்கும் பா.ஜ.,வுடன் த.வெ.க., கூட்டணி அமைப்பதற்கும் எந்த வித சம்மந்தம் இல்லை.பா.ஜ.,வுடன் எப்போதும் கூட்டணி வைக்கப்போவதில்லை என விஜய் தெளிவாக தெரிவித்துவிட்டார். ஆனால் மத்திய அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஏன் விஜய்யை தாங்குகிறார்கள் என்பது தெரியவில்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ