உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் வருடாபிஷேகம் துவக்கம்

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் வருடாபிஷேகம் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வருடாபிஷேக விழா மஹாசாந்தி ஹோமத்துடன் துவங்கியது.இதனை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் யாகசாலைக்கு எழுந்தருளினர். அங்கு எஜமான சங்கல்பம், புண்யாக வாசனம், மஹாசாந்தி ஹோமம், திருமஞ்சனம், பூர்ணஹூதி, திருவாராதனம் சாத்துமுறை, தீர்த்த கோஷ்டி மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று 108 கலச திருமஞ்சனமும், நாளை விசேஷ திருமஞ்சனம், லட்சார்ச்சனையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி