உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  கார்த்திகை மாதம் பிறந்தது ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்

 கார்த்திகை மாதம் பிறந்தது ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கார்த்திகை மாதம் பிறந்ததையடுத்து கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் வழிபாடு செய்து மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை மாதம் பிறந்ததையடுத்து ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து மாலை அணிந்து விரத்தை துவக்கினர். இதே போல நகர், புறநகர், ஊரகப்பகுதிகளில் உள்ள கோயில்களிலும் பக்தர்கள் வழிபாடு செய்து விரத்தை துவக்கினர். ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி, ஐயப்பன் சன்னதி, பழனி ஆண்டவர் கோயில் உட்பட நகரில் பல்வேறு தெருக்களில் உள்ள கோயில்களுக்கு அந்தந்த பகுதி பாலகர்கள் முதல் முதியவர்கள் வரையிலான ஐயப்ப பக்தர்கள் குளித்து விட்டு, கருப்பு உடை அணிந்து வந்தனர். பின்னர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். தங்களது குரு சுவாமிகள் மூலம் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். இதனால் நேற்று நகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஐயப்பனின் சரண கோஷம் ஒலித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்