சுகாதார கேடுகளுக்கு மத்தியில் குடிநீர் பிடிக்கும் அவலம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அச்சம் தவிழ்த்தான் ஊராட்சி கோடாங்கிபட்டி வடக்கு தெருவில் ரோடு, வாறுகால் வசதி இல்லாததால் சகதி , சுகாதார கேடுகளுக்கு மத்தியில் பெண்கள் குடிநீர் பிடிக்கும் அவலநிலை காணப்படுகிறது.இத்தெருவில் ரோடு, வாறுகால் வசதி இல்லாமல் மண் தரையில் சகதி ஏற்பட்டு மழைக்காலங்களில் மக்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது.மேலும், இதனருகில் குடிநீர் குழாய் உள்ளதால் சுகாதார கேடுகளுக்கு மத்தியில்தான் குடிநீர் குடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் நோய் பாதிப்பு ஏற்படும் நிலை காணப்படுகிறது.எனவே, தங்கள் தெருவில் முறையான ரோடு, வாறுகால் அமைத்து பாதுகாப்பான முறையில் குடிநீர் பிடிப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.