உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மடிப்பிச்சை ஏந்தும் போராட்டம்

மடிப்பிச்சை ஏந்தும் போராட்டம்

விருதுநகர்: விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பாக தமிழ்நாடு சத்துணவு - அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மடிப்பிச்சை ஏந்தும் போராட்டம் நடந்தது.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாவட்டத் தலைவர் எஸ்தர் தலைமை சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க நிர்வாகி அய்யம்மாள் விளக்கினார்.ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் உலகநாதன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன், முன்னாள் மாநில துணைத் தலைவர் கண்ணன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கம் மாநில பொருளாளர் மோகனவள்ளி தாயார் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.பொதுமக்களிடம் மடிப்பிச்சை ஏந்த முற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். 93 பெண்கள், 10 ஆண்கள் என 103 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை