உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கட்டட கழிவுகள் கொட்டப்படும் தும்பை குளம் கண்மாய்

கட்டட கழிவுகள் கொட்டப்படும் தும்பை குளம் கண்மாய்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தும்பை குளம் கண்மாயில் கட்டட கழிவுகளை கொட்டியும்,சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கண்மாயின் பரப்பளவு குறைந்து வரும் அவலத்தில் உள்ளது.அருப்புக்கோட்டை நகராட்சி 36 வது வார்டு கடைசி பகுதியிலும், கஞ்சநாயக்கன்பட்டி செல்லும் வழியிலும் தும்பைகுளம் கண்மாய் உள்ளது. கஞ்சநாயக்கன் பட்டியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி தந்தது. கண்மாய் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ளதா, நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளதா , என தெரியாமல் கண்மாயை பராமரிக்காமல் விட்டுவிட்டனர். கண்மாய் முழுவதும் ஆகாய தாமரைகள், கோரை புற்கள் முளைத்தும், நகரில் ஒரு பகுதி வீடுகளின் கழிவு நீர் முழுவதும் கண்மாயில் கலக்கப்பட்டு சுகாதார கேடாக உள்ளது. கண்மாயில் இடிக்கப்பட்ட கட்டட கழிவுகளை தினமும் கொட்டுகின்றனர். மற்றொரு புறத்தில் கண்மாய் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. கண்மாயின் வேறொரு பக்கத்தில் குப்பைகளும், கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இன்னும் சில காலங்களில் கண்மாய் இருப்பதே தெரியாமல் போய்விடும்.கண்மாய் எந்த துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என கண்டறிந்து உடனடியாக கண்மாயை பராமரித்து தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயை சுற்றிலும் தடுப்பு சுவர் கட்டி பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் தும்பைகுளம் கண்மாய் காணாமல் போய்விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை