ரயிலில் வாலிபருக்கு நெஞ்சுவலி விருதுநகரில் சிகிச்சை
விருதுநகர்:விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் சேர்ந்தவர் ஜெரோம் 30. கோவில்பட்டியில் இருந்து நேற்று முன்தினம் வந்தே பாரத் ரயிலில் சென்னை சென்றார். திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அங்கு 4:35 மணிக்கு ரயில் நிறுத்தப்பட்டது. ஸ்டேஷனில் தயாராக இருந்த அரசு மருத்துவர் ஜெயக்குமார் முதலுதவி சிகிச்சை அளித்தார். பின் ஜெரோம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.விருதுநகரில் இருந்து 4:40 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயிலுக்கு விருதுநகரில் நிறுத்தம் கிடையாது.