மேலும் செய்திகள்
55 ஆசிரியர்களுக்கு ஜாலி போனிக்ஸ் பயிற்சி
4 hour(s) ago
கலசலிங்கம் பல்கலை சாதனை
4 hour(s) ago
திருச்சுழி : திருச்சுழியில் நிரந்தர பஸ் ஸ்டாண்ட் அமைக்க இடம் பார்த்து பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.திருச்சுழியில் பழமையான பிரசித்தி பெற்ற பூமிநாதர் கோவில் உள்ளது. ரமண மகரிஷி பிறந்த ஊரும் இதுதான். திருச்சுழியில் ஓடும் குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் காசி, ராமேஸ்வரத்தில் செய்த புண்ணியம் கிடைக்கும். இதனால் இவற்றை தரிசிக்க சுற்றுலா பயணிகள் வெளியூர்களில் இருந்து வந்து செல்வர்.புகழ்வாய்ந்த திருச்சுழி சுற்றுலா தலமாக அரசு 8 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. ஆனால் எந்தவித வசதிகளும் இல்லை. குறிப்பாக திருச்சுழியில் பஸ் ஸ்டாண்ட் இல்லை. வெளியூரிலிருந்து வருபவர்கள் பஸ் ஸ்டாண்டை தேடி அலைய வேண்டியுள்ளது.மக்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருச்சுழி - நரிக்குடி ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. தொகுதி அமைச்சர் தங்கம்தென்னரசு இடத்தை பார்வையிட்டு, இடத்தை தேர்வு செய்து, விரைவில் பணிகள் நடக்கும் என கூறினார்.அதன் பின்னர், பணிகள் எதுவும் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஊராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்ட் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago