மேலும் செய்திகள்
மாவட்ட நுாலகத்தில் திருக்குறள் போட்டி
15-Dec-2024
விருதுநகர்: விருதுநகரில் நுாலகத்துறை சார்பில் திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவை முன்னிட்டு திருக்குறள் புகைப்பட கண்காட்சி துவங்கப்பட்டது. மாவட்ட மைய நுாலகத்தில் டிச. 23 முதல் 31 வரை திருக்குறள் தொடர்பான புகைப்படங்களையும் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்படுகிறது.கலெக்டர் ஜெயசீலன்தலைமை வகித்து துவங்கி பேசுகையில், நம்மை நாமே ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு ஒரு சட்டம் ஒன்று இருக்கும் என்றால் அது திருக்குறளை போல் வேறு ஒன்று இல்லை என்று உலக தத்துவ நுால்களை ஆய்வு செய்த மாற்று மொழி அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த கொடையை எண்ணி முதலில் நாம் பெருமை கொள்ள வேண்டும், என்றார். மாவட்ட நுாலக அலுவலர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
15-Dec-2024