உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாலிபர் கொலை வழக்கில் மேலும் மூன்று பேர் கைது

வாலிபர் கொலை வழக்கில் மேலும் மூன்று பேர் கைது

ராஜபாளையம் : ராஜபாளையம் கருப்பசாமி 30 கொலை வழக்கில் போலீசார் தேடிய ராஜவேல் பாண்டியன் 26,நவீன் சித்தார்த் 21, ஜெய்கணேஷ் 26, கைது செய்யப்பட்டுள்ளனர்.ராஜபாளையத்தில் ஜன. 14ல் மங்காபுரம் தெருவை சேர்ந்த கருப்பசாமி 30, மாரியம்மன் கோயில் விழா திடலில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே ஆண்டத்தம்மன் கோயில் தெரு மங்காபுரம் பகுதிகளை சேர்ந்த காளிராஜ், அய்யனார், செந்தில்குமார், லோகேஷ் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அதே வழக்கில் தேடப்பட்டு வந்த ராஜவேல் பாண்டியன், நவீன் சித்தார்த், ஜெய்கணேஷ் ஆகிய மூவரை கைது செய்து,மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி