உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆண்டாள் பக்தர்களுக்கு திருப்பதி போல் தங்குமிடம்

ஆண்டாள் பக்தர்களுக்கு திருப்பதி போல் தங்குமிடம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் உள்ளது போல் தங்குமிடம் கட்டித் தர வேண்டுமென இந்திய கம்யூ., தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இக்கட்சியின் நகர் 30வது மாநாடு ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது. நகர் குழு நிர்வாகி காளியப்பன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி.க்கள் அழகிரிசாமி, லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன் பேசினர்.மாநாட்டில், நகர் பகுதியில் தினமும் குடிநீர் சப்ளை, கழிவு நீர் வாறுகால்களை உடனடியாக தூய்மைப்படுத்துதல், வரத்து கால்வாய்கள் தூர்வாறுதல், ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் கட்டப்பட்டுள்ளது போல் தங்குமிடம் அமைத்துக் கொடுத்தல் உட்பட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. நகர செயலாளராக மூர்த்தி, துணை செயலாளர்களாக கந்த சக்தி, சிவா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ