டிட்டோ ஜாக் மறியல் போராட்டம் கைது 230
விருதுநகர்: சி.பி.எஸ்., ரத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ ஜாக் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் செல்வகணேசன் தலைமை வகித்தார். 230 பேர் கைது செய்யப்பட்டனர்.