மேலும் செய்திகள்
காத்திருப்பு போராட்டம்
24-Aug-2025
விருதுநகர்: விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆக. 18 முதல் ஆப்சென்ட் போடப்படும் என நிர்வாகத்தின் அறிவிப்பால் ஊழியர்கள் அலுவலக வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் சி.ஐ.டி.யு., ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் அனைவருக்கும் பென்சன் வழங்குதல், கல்வி தகுதி அடிப்படையில் வாரிசு பணி வழங்குதல், 25 மாதங்களாக வழங்காத ஓய்வூதியர்களின் நிலுவைகளை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆக. 18ல் துவங்கி மத்திய சங்க தலைவர் திருப்பதி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்து வந்தது. விருதுநகரில் மட்டும் காத்திருப்பு போராட்டத்தில் ஆக. 18 முதல் பங்கேற்ற ஊழியர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் என நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து நேற்று காலை விருதுநகர் அரசு போக்குவரத்து கழக வளாகத்திற்குள் ஊழியர்கள் ஆப்சென்ட் போடப்படும் என்ற அறிவிப்பை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். டி.எஸ்.பி., யோகேஷ்குமார் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடும் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டால் விருதுநகரிலும் ஆப்சென்ட் போடப்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கான கடிதத்தை பொது மேலாளரிடம் வழங்கினர்.
24-Aug-2025