உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நேரம் முடிந்த அனுமதிச்சீட்டு வைத்து உடைகல் ஏற்றி வந்த லாரிகள் விடுவிப்பு

நேரம் முடிந்த அனுமதிச்சீட்டு வைத்து உடைகல் ஏற்றி வந்த லாரிகள் விடுவிப்பு

காரியாபட்டி: காரியாபட்டியில் நேரம் முடிந்த அனுமதி சீட்டுடன் உடைகல் ஏற்றி வந்த லாரிகளை தாசில்தார் விடுவித்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரியாபட்டியில் நேற்று காலை 11.50 க்கு இரு லாரிகளில் உடைகல் ஏற்றி சென்றன. தாசில்தார் மாரீஸ்வரன் லாரிகளை நிறுத்தி ஆய்வு செய்தார். அனுமதிச்சீட்டில் நேரம் முடிந்திருந்தது. இதனால் இரு லாரிகளையும் தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி, ஒரு மணி நேர விசாரணைக்கு பின் இரு லாரிகளையும் விடுவித்தார். சில தினங்களுக்கு முன் அனுமதி சீட்டு இன்றி கிரசர் தூசி ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்படி இருக்கும்போது இரு லாரிகளையும் உடனடியாக விடுவித்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரீஸ்வரன், தாசில்தார் ,'' உடைகல் ஏற்றி வந்த இரு லாரிகளை மறித்து ஆய்வு செய்த போது, அனுமதிச்சீட்டில் நேரம் முடிந்திருந்தது. தாலுகா அலுவலகத்திற்கு லாரிகள் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டது. இரு லாரிகளிலும் பழுது ஏற்பட்டதால் காலதாமதம் ஆனதாக டிரைவர்கள் காரணம் தெரிவித்தனர். மனிதாபிமானம் அடிப்படையில் இரு லாரிகளையும் விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மற்றபடி யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை