நண்பரை வெட்டிய இருவர் கைது
காரியாபட்டி: காரியாபட்டி உவர் குளத்தைச் சேர்ந்த கர்ணன்19, பெரிய ஆலங்குளத்தைச் சேர்ந்த அழகுராஜா 19, மதுரை சமய நல்லூரை சேர்ந்த சந்துரு 23. நண்பர்கள். திருப்பூரில் பிரிண்டிங் பிரஸ்சில் ஒன்றாக வேலை செய்தனர். மது போதையில் இருந்த கர்ணன், சந்துரு, அழகுராஜாவுக்கு அலைபேசியில் அழைத்து தகாத வார்த்தையில் பேசினார். இதில் ஆத்திரமடைந்து இருவரும் கர்ணனை சமாதானமாக பேசி, நேற்று முன் தினம் இரவு மது அருந்தினர். அப்போது அங்கு தகராறு ஏற் பட்டது. அரிவாளால் கர்ணனை தலை, முகத்தில் இருவரும் வெட்டினர். பலத்த காய மடைந்து, விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருவரையும் கைது செய்து, காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.