மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
20 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
20 hour(s) ago
சிவகாசி: சிவகாசியில் இந்திரா நகரைச் சேர்ந்த கணேசனை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் ஆணையூர் ஊராட்சி துணைத் தலைவரின் கணவர் தங்கபாண்டியனை 35, கைது செய்த போலீசார் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மேலும் இருவரை கைது செய்தனர்.சிவகாசி அருகே ஆணையூர் ஊராட்சி துணை தலைவர் முத்துமாரி. இவரது கணவர் தங்கபாண்டியன் 35. முத்துமாரியின் சகோதரிக்கும் அவரது கணவரான சிவகாசி ரிசர்வ் லைன் இந்திரா நகரை சேர்ந்த கணேசனுக்கும் 37, இடையே ஏற்பட்ட பிரச்சனையில் அரிவாளால் வெட்டியதில் கணேசன் இறந்தார்.டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்த தங்கபாண்டியனை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக இந்திரா நகரை சேர்ந்த சிலம்பரசன், அய்யனார் காலனியை சேர்ந்த மாரி செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.
20 hour(s) ago
20 hour(s) ago