உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரில் சென்று ஆடுகள் திருட்டு துாத்துக்குடியில் 2 பேருக்கு காப்பு

காரில் சென்று ஆடுகள் திருட்டு துாத்துக்குடியில் 2 பேருக்கு காப்பு

துாத்துக்குடி:துாத்துக்குடியில் காரில் சென்று ஆடு திருடியதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். துாத்துக்குடி சிப்காட் காவல் நிலைய பகுதிகளில், ஒரு கும்பல் காரில் ஆடுகளை திருடி செல்வதாக, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், திரவியரத்தினம் நகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த காரை நேற்று மடக்கி பிடித்தனர். காரில் இருந்தவர்கள் ஆடு திருடும் கும்பல் என தெரிந்தது. காரில் இருந்த சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த அராபத், 29, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மோசஸ் மனோகரன், 26, ஆகியோரை கைது செய்தனர். அவர்கள், 11 ஆடுகளை திருடி விற்றது விசாரணையில் தெரிந்தது. அவர்களிடம் இருந்து, கார் மற்றும் 75,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவர் மீதும், ஆடுகள் திருடிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை