உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி

டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி

அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி காசிலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன்,30, இவர் ஓசூரில் வேலை பார்க்கிறார். பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு 9:00மணிக்கு ஊருக்கு செல்வதற்காக தனது உறவினர் தங்கமலை, 37, உடன் டூவீலரில் (ெஹல்மெட் அணியாமல்) சென்றார். பந்தல்குடி பஜார் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அருப்புக்கோட்டை வெள்ளகோட்டை பகுதியைச் சேர்ந்த வீர கணேசன் (ஹெல்மெட் அணியாமல்) ஒட்டி வந்த டூவீலர் மோதியதால், இருவரும் காயமடைந்தனர். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வேல்முருகனை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார். பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ