மேலும் செய்திகள்
மேலமுந்தலில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு
13-Dec-2024
நரிக்குடி : நரிக்குடி மானூரில் அங்கன்வாடி மைய புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு 4 மாதங்களாக திறக்கப்படாமல் கிடப்பில் போட்டனர். நூலகத்தில் இட நெருக்கடியில் படிக்கும் சிறார்கள் பாதிக்கப்படுவதால், உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். நரிக்குடி மானூரில் அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட சிறார்கள் படிக்கின்றனர். இக்கட்டடம் விரிசல் ஏற்பட்டு, சேதமடைந்ததால், சிறார்களை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப பெற்றோர் அச்சம் தெரிவித்தனர். இதையடுத்து அங்குள்ள நூலக கட்டடத்தில் 2 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ரூ.14 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை திறக்கப்படாமல் கிடப்பில் போட்டனர். நூலக கட்டடத்தில் இட நெருக்கடியான சூழ்நிலையில் சிறார்கள் படித்து வருகின்றனர். மேலும் நூலகத்தில் ஊராட்சி பணிகளுக்காக சிமென்ட் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. புதுவாழ்வு திட்ட பழைய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன. நூலகத்தில் இருந்த புத்தகங்களும் பராமரிக்கப்படாமல் உள்ளது. குருப் தேர்வுக்கு படிக்க மாணவர்கள் அல்லோலப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
13-Dec-2024