உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செப்பனிடாத பேவர் பிளாக் ரோடு

செப்பனிடாத பேவர் பிளாக் ரோடு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நாகலிங்க நகர் விரிவாக்க பகுதியில் கிடப்பில் போடப்பட்ட ஜல்ஜீவன் திட்டம், வாறுகால் இல்லாததால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு, திறந்தும் பயன்பாட்டிற்கு வராமல் பாழாகும் சிறுவர் பூங்கா உட்பட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர்.அருப்புக்கோட்டை நகராட்சி 17 வது வார்டை சேர்ந்த புறநகர் பகுதி நாகலிங்க நகர். இதில், 15க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய்கள் பதிக்க தெருக்களில் உள்ள பேவர் பிளாக் கற்களை தோண்டி எடுத்து விட்டு, பணிகள் முடிக்காமல் கிடப்பில் போட்டு விட்டனர். இதனால், மக்கள் தெருவில் நடக்க முடியாமலும், டூ வீலர்களில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் இணைப்பும் வழங்கப்படவில்லை. தெருக்களில் வாறுகாலும் அமைக்கப்படவில்லை. கழிவு நீர் தேங்கி சுகாதார கேடாக உள்ளது. குப்பைகளை அள்ள தூய்மை பணியாளர்கள் வருவதில்லை. இங்கு நகராட்சி மூலம் சிறுவர் பூங்கா 3 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு, திறப்பு விழா கண்டு, பயன்பாட்டிற்கு வராமலேயே முட்புதர்கள் சூழ்ந்து பாழாகி உள்ளது.இதன் அருகில் நகராட்சியின் மினி குப்பை மையம் உள்ளது. இங்கு குப்பைகளை கொட்டி தரம் பிரிக்கின்றனர். வீடுகளுக்கு நடுவில் இருப்பதால் குப்பைகளின் துர்நாற்றம் தாங்க முடியவில்லை. பகல் நேரத்தில் ஈ, இரவு நேரங்களில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. மினி பவர் பம்ப் தொட்டி, தெருக்களில் மின்விளக்குகள் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை