உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  திட்டமிடல் இன்றி உயரமாக கட்டப்பட்ட தரைப்பாலம் வாடியான் தெருவில் விபத்து அபாயம்

 திட்டமிடல் இன்றி உயரமாக கட்டப்பட்ட தரைப்பாலம் வாடியான் தெருவில் விபத்து அபாயம்

விருதுநகர்: விருதுநகர் வாடியான் தெருவில் திட்டமிடல் இன்றி உயரமாக தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. விருதுநகர் வாடியான் தெருவில் முன்பு மழை பெய்தால் அது வெளியேற வழியின்றி தேங்கி பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் தரைப்பாலம் ஏற்படுத்தி தண்ணீர் வடிய வழி வகை செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வந்தது. வாடியான் தெருவில் திட்டமிடல் இன்றி தற்போது 2 அடி உயரத்திற்கும் அதிகமாக தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே ரோடு மேலே ரோடு போட்டு உயரம் அதிகரிப்பதால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து வரும் நிலையில், இந்த பாலம் இருக்கும் ரோட்டை காட்டிலும் அதிக உயரத்தில் இருப்பதால், இதை காரணம் காட்டில் வாடியான் தெருவில் மீண்டும் ரோட்டின் உயரத்தை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்த பாலம் மூன்று சந்திப்புகள் இணையும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று புறங்களில் இருந்து வாகனங்கள் வந்தால் நிச்சயம் வாகன ஓட்டிகள் சறுக்கி விபத்தை சந்திப்பர். மக்களின் தேவையை உணர்ந்து சரியான உயரத்திற்கு கட்டித்தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்