| ADDED : ஜன 31, 2024 12:03 AM
விருதுநகர் : விருதுநகரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முத்தையா, கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு:ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு அருகில் வனத்துறையினர் எவ்வித அரசு ஆணையும் இன்றி பட்டா நிலங்களுக்கு செல்லும் விவசாயிகளிடமும், கூலித்தொழிலாளர்களிடமும், காட்டழகர் கோயில், குல தெய்வ வழிபாட்டுக்கு பேச்சியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடமும் என அவ்வழியே செல்லும் அனைவரிடமும் ஒரு நபருக்கு ரூ.20 வீதம் கட்டாய வசூல் செய்கின்றனர்.இது குறித்து பொதுமக்கள் கேட்டால் செண்பகத்தோப்பில் குடியிருந்து வரும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு குழு அமைத்து அதன் மூலம் தான் வசூல் செல்கிறோம் என கூறி வருகின்னர்.அவ்வாறு எந்த குழுவும் பதிவுசெய்யப்படவில்லை. தவறான கருத்தை கூறி பணம் வசூலிக்கின்றனர். செண்பகத்தோப்பில் குடியிருந்து வரும் மலைவாழ் மக்கள் கூறும் போது வனத்துறையினர் அப்பணத்தின் மூலம் எந்த விதமான உதவியோ, வசதிகளை செய்து தர வில்லைஎன்கின்றனர்.ஆகவே அனைத்து தரப்பு மக்கள், விவசாயிகள் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் வசூல் செய்வதை தடுத்த நிறுத்த வேண்டும், எனகேட்டுள்ளார்.