மேலும் செய்திகள்
மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
11-May-2025
விருதுநகர்: விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா மே 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் நகர்வலம் வந்து கோயில் திடலில் அருளாசி வழங்கினார்.நேற்று நடந்த பொங்கல் திருவிழாவில் திரளான பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி நகர்வலம் வந்து கோவில் திடலில் மண்டபத்தில் அமர்ந்து அருளாசி வழங்கினார்.இன்று கயிறுகுத்து, அக்னிசட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், உருமாறி பல வேடங்கள் அணிந்து வருதல் உள்ளிட்ட நேர்த்திகடன்களை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர். மேலும் நாளை (ஜூன் 5) தேராட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார்கள் தேவஸ்தானம் செய்கின்றனர்.
11-May-2025