உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செயல்படாத சுகாதார வளாகம், சேதமான மடைகள் தவிப்பில் விருதுநகர் பாவாலி மக்கள்

செயல்படாத சுகாதார வளாகம், சேதமான மடைகள் தவிப்பில் விருதுநகர் பாவாலி மக்கள்

விருதுநகர் : செயல்படாத சுகாதார வளாகங்கள், சேதமான மடைகள், மண் மேவிய வாறுகால்கள், பள்ளி அருகே திறந்த நிலையில் கிணறு என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் பாவாலி ஊராட்சி மக்கள்.விருதுநகர் அருகே உள்ள பாவாலி ஊராட்சி பகுதியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்கு2020- 2021, 2021 - 2022 ஆண்டுகளில் இரு சுகாதார வளாகங்கள் தலாரூ. 5.25 லட்சத்தில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் திறந்த வெளி கழிப்பிடங்கள் அதிகரித்து சுகாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் ஊராட்சி கண்மாயில் உள்ள இருமடைகள் சேதமாகி பல ஆண்டுகள் ஆகிறது. இதை சரிசெய்யாததால் கண்மாய்க்கு நீர் வந்தும், விவசாயத்திற்கு பயன்படுத்த முடிவதில்லை. நீர்வரத்து ஓடைகள் துார்வாரமல் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது.இப்பகுதியில் முறையாக வாறுகால், ரோடு அமைக்கப்படவில்லை. ஊராட்சி அலுவலகத்திற்கு செல்லும் வழியில் உள்ள வாறுகாலில்மண் மேவி கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் உள்ளது.பாவாலி அரசு உயர்நிலை பள்ளிக்கு அருகே திறந்த நிலையில் மக்கள் பயன்படுத்தாத கிணறு உள்ளது. இதில் மாணவர்கள் விழுந்து விடாமல் இருக்கமண்ணை கொட்டி நிரப்பி மூட வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும்நடவடிக்கைஎடுக்கப்படவில்லை.பாவாலி கண்மாய் அருகே உள்ள மேல்நிலைக்குடிநீர் கட்டி 20 ஆண்டுகளை கடந்து விட்டது. தற்போது சேதமாகி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் உடனடியாக இடித்து அகற்ற வேண்டும். இதன் அருகே உள்ள ஊரணியின் சுற்றுச்சுவர் முழுவதும் சேதமாகி இருப்பதால் மழை நீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது.இங்குள்ள கண்மாய் மடைகள் சீரமைக்கப்படாததால் பல ஆண்டுகளாக உள்ளது. மேலும் கண்மாய் துார்வாரப்படாததால் தண்ணீரை தேக்கி விவசாயத்திற்கு பயன்படுத்த முடியவில்லை. எனவே கண்மாய் மடைகளை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரவி, விவசாயி.மேல்நிலைக் குடிநீர் தொட்டி கட்டி 20 ஆண்டுகளை கடந்து விட்டதால் துாண்கள் சேதமாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. விபத்து ஏற்படுவதை தடுக்க உடனடியாக இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மணிகண்டன், விவசாயி.

குடிநீர் தொட்டி அகற்ற வேண்டும்

குடிநீர் தொட்டி அகற்ற வேண்டும்

பாவாலியில் புதிதாக கட்டப்பட்ட இரு சுகாதார வளாகங்கள் தற்போது வரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாதவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சுகாதார வளாகங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.- ஆதவன் வடிவேல்.

சுகாதார வளாகத்தை செயல்படுத்துங்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி