மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
18 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
18 hour(s) ago
விருதுநகர் : விருதுநகரில் நகராட்சி பகுதியில் விலை மதிப்புடைய இடங்களை, தரை வாடகைக்கு விட்டது தொடர்பாக ஆய்வுக்கு வந்த நகராட்சிகளின் மண்டல இயக்குனர் மோகன் ஜீப்பினை விட்டு இறங்காமல் பார்வையிட்டு சென்றார். விருதுநகர் நகராட்சி பகுதிகளில் உள்ள விலை மதிப்புள்ள சில இடங்கள், குறைந்த வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதனால் நகராட்சி வருவாய் பாதிப்பதாக புகார்கள் சென்றன. இதைதொடர்ந்து, ராமமூர்த்தி ரோட்டில் தனியார் தியேட்டர் அருகே சைக்கிள் ஸ்டாண்ட், திருவேங்கடம் ஆஸ்பத்திரி எதிரே உள்ள இடம், பழைய பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் அண்ணா சிலை அருகே இரண்டு கடைகள், கமாலியா ஓட்டல் எதிர்புறம் உள்ள கடைகளை ஆய்வு செய்ய, நகராட்சிகளின் மண்டல இயக்குனர் மோகன் வந்தார். காலை 11 மணிக்கு வந்த அவர், மேற்கண்ட இடங்களுக்கும் ஜீப்பில் சென்றார். ஆனால் எந்த இடத்திலும் இறங்கி ஆய்வு செய்யவில்லை. ஆய்வு தொடர்பாக இவரிடம்நிருபர்கள் கேட்டபோதும்,'' பதில் கூற மறுத்தப்படி ,'சென்றார்.
18 hour(s) ago
18 hour(s) ago