உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வரதட்சணை புகார் 3 பேர் மீது வழக்கு

வரதட்சணை புகார் 3 பேர் மீது வழக்கு

சாத்தூர் : சாத்தூர் அருகே வரதட்சணை புகாரில் மூன்று பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சாத்தூர் பட்டையன் செட்டி தெருவை சேர்ந்தவர் சத்திய பிரியா,20. இவர், மதுரை பொன்னகரத்தை சேர்ந்த மணிகண்டனை காதல் திருமணம் செய்தார். ஆறுமாத பெண்குழந்தை உள்ளது. பொன்னகரத்தில் மாமனார் சேது, மாமியார் தங்க நாச்சியாருடன் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர். தினமும் குடிபோதையில் வரும் மணிகண்டன், தந்தைமற்றும் தாயாருடன் சேர்ந்து 30 பவுன் நகை , மூன்று லட்சம் ரொக்கம் கொண்டு வர கூறி, சத்திய பிரியாவை அடித்து உதைத்துள்ளார். சாத்தூர் மகளிர் போலீசார், மூன்று பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை