மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
9 minutes ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
10 minutes ago
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் அனுமதியின்றி தயார் செய்த கரிமருந்து திரிபண்டல் ,இதை ஏற்றிய மினிலாரி மற்றும் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகரை சேர்ந்தவர் பழனியப்பன் ,49. இவர், நேற்று காலை 9 மணிக்கு, தன் வீட்டில் அனுமதியின்றி தயாரித்த கரி மருந்து திரி பண்டல்கள், தயாரிக்க உதவும் கரி மருந்து பொருட்களை , மினி லாரியில் ஏற்றினார். ரோந்து வந்த டவுன் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், லாரியை சோதனை செய்தார். பழனியப்பன், டிரைவர் மாரிச்சாமியை கைது செய்து, திரிபண்டல் ஏற்றிய லாரியை பறிமுதல் செய்தார். அருப்புக்கோட்டையில் பல பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிக்கும் பணி கன ஜோராக நடக்கிறது. வருவாய் துறை, போலீசார் இணைந்து சோதனை செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இதன் தொழில் செய்பவர்கள், ஊக்கப்படுத்தும் ஏஜென்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
9 minutes ago
10 minutes ago