உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சத்திரப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்

சத்திரப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்

சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி அருகே சங்கரபாண்டியபுரம் சுந்தரசாலியர் பள்ளியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. முனுசாமிஆர்.டி.ஓ., தலைமை வகித்து, மனுக்களை பெற்றார். தாசில்தார் தன்ராஜ் வரவேற்றார். தாசில்தார் நிர்மலா, சமுசிகாபுரம் ஊராட்சி தலைவி பேச்சியம்மாள் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் நலமைய செயல்பாடுகள், விவசாய அபிவிருத்தி, தோட்டக்கலை துறை மானியங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். கிராம பிரச்னைகள் குறித்து பள்ளி செயலாளர் பிள்ளையார், சமூக சேவகர் குருசாமி பேசினர். 33 மனுக்கள் பெறப்பட்டன. பல்வேறு திட்டங்கள் படி 25 பயனாளிகளுக்கு மூன்று லட்சம் ரூபாய் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தாசில்தார் மாரிமுத்து நன்றி கூறினார். ஏற்பாடுகளை கருப்பசாமி ஆர்.ஐ., ஆனந்தம் வி.ஏ.ஓ., செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி