உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி மாணவன் கோர்ட்டில் ஆஜர்

சிவகாசி மாணவன் கோர்ட்டில் ஆஜர்

சிவகாசி : சிவகாசி மாணவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பெற்றோரிடம் ஒப்படைத்த பின்பும், தொடரும் மொபைல் போன் மிரட்டலால் போலீசார் திணறுகின்றனர்.சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் ரமேஷ்பாண்டியன் மகன் கோடீஸ்வரன்,14. 10 ம் வகுப்பு மாணவரான இவர் , ஆக.,30 முதல் காணாமல் போனார். இவரை கடத்தி வைத்திருப்பதாகக்கூறி, மர்ம கும்பல் ரூ.25 லட்சம் கேட்டு போனில் மிரட்டியது. கும்பல் கொடுத்த வங்கி கணக்குப்படி, திண்டுக்கலில் உள்ள ஆண்டவர், அவரது சகோதரர்கள் பழனிச்சாமி, ஈஸ்வரனை பிடித்து விசாரிக்கின்றனர். இதனிடையே, ஊர் திரும்பிய மாணவனை போலீசார் மீட்டனர். வீட்டில் கோபித்து திருச்செந்தார் சென்றாக கூறினார். விசாரணைக்கு பின் , சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்திய போலீசார் , பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவனை பெற்றோரிடம் ஒப்படைத்த பின்பும், ரமேஷ்பாண்டியன் மொபைலில் இந்தியில் பேசும் நபர், ''பணத்தை வங்கியில் செலுத்தாவிட்டால், மகனை கொன்று விடுவதாக,'' மிரட்டுகிறார். மிரட்டல் வரும் மொபைல் எண் 13 இலக்கமாக இருப்பதால் , எண்ணை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது. மிரட்டல் போனால் மாணவனின் குடும்பத்தினரும் பீதியில் உள்ளனர். 3 பேர் கைது: மொபைல் போனில் மிரட்டிய நபர் கொடுத்த வங்கி கணக்கு ,திண்டுக்கல் அருகே குழிப்பட்டியை சேர்ந்த ஆண்டவருடையது என்பது தெரிந்தது. அதன்படி போலீசார் , ஆண்டவர், அவரது சகோதரர்கள் பழனிச்சாமி, ஈஸ்வரனை விசாரித்தனர். இவர்களை சிவகாசி கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர் .

பாக்ஸ் : ராங்க் கால் படுத்தும் பாடு மாணவன் கோடிஸ்வரன் ,வீட்டில் கோபித்துகொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். மகன் காணாமல் போன குழப்பத்தில் இருந்த ரமேஷ்பாண்டியன் மொபைல் போனுக்கு , அழைப்பு வந்தது. இந்தியில் பேசியதால்,அவரால் புரிய முடியவில்லை . இந்தி தெரிந்த நண்பர் மூலம், அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, இவர்களாகவே மாணவன் காணாமல் போனதை கூற, ராங்க் கால் அழைப்பை சாதகமாக பயன்படுத்திய அந்த நபர் , ரமேஷ்பாண்டியனிடம் பணம் பறிக்க , முயன்றிருக்கலாம், என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே, நேற்று காலையில் இந்தியில் பேசியவரிடம் தொடர்பு கொண்ட போலீசார், 'எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கி கொள், மாணவனை எங்களிடம் பேச சொல் என்றனர். அதற்கு,'' மாணவன் மீது வெந்நீரை ஊற்றி விட்டோம் அவனால் பேச முடியாது,'' என்றுள்ளான். இதை தொடர்ந்து போலீசார் சந்தேகம் வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ