மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
6 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
6 hour(s) ago
ராஜபாளையம் : ''மனித வளம் அதிகமாக உள்ளதால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வருகின்றன,'' என,மத்திய அரசின் தொழில்கள் வளர்ச்சி நிறுவன உதவி இயக்குனர் புனிதவதி கூறினார்.ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர்., பாலிடெக்னிக்கில் நடந்த சேலையில் அச்சிடும் பயிற்சி பெற்ற பெண்களுக்கான சான்றிதழ் வழங்கிய அவர் பேசுகையில், ''தகுதி, திறமை இருந்தால், பெண்களுக்கு நிதியுதவி செய்ய ஏராளமான நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. இந்தியாவில் மனிதவளம் அதிகமாக இருப்பதால், பல தொழில்களில் முன்னேறும் வாய்ப்பு உள்ளது. இதனால் தான் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வருகின்றன. வாய்ப்புகளை பயன்படுத்தி பெண்கள் முன்னேற வேண்டும். வாய்ப்புகள் உங்களை தேடி வருகிறது, அதை பயன்படுத்தி கொள்ளுங்கள்,'' என்றார். மாவட்ட தொழில்முனைவோர் சங்க தலைவர் ராஜ்குமார், பாரதமாதா மக்கள் இயக்க தலைவர் சரவணன், பயிற்றுனர்கள் மஞ்சுளா, விஜயா, ரூபகலா கலந்துகொண்டனர்.
6 hour(s) ago
6 hour(s) ago