உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர்கள் இல்லை, கட்டடங்கள் உண்டு

மாணவர்கள் இல்லை, கட்டடங்கள் உண்டு

சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரிய கொல்லபட்டி ஊராட்சி பெரிய கொல்லபட்டி,நீராவிபட்டி ஆகிய இரு கிராமங்களை கொண்டது.வைப்பாற்றின் கரையில் அமைந்திருக்கும் ஊராட்சியாகும். பெரிய கொல்லபட்டி கண்மாய் பாசனம் மூலம் நெல் சாகுபடி நடைபெறுகிறது. தீப்பெட்டி தொழிற்சாலைகள் இப்பகுதியினரின் மாற்று தொழிலாகும்.சாத்தூரில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் ஊராட்சி இருந்த போதும் இன்றும் வளர்ச்சி இல்லை. ஊராட்சி தலைவராக ராமலட்சுமி, துணைத்தலைவராக கே.ரெங்கசாமி மற்றும் 9 உறுப்பினர்கள் உள்ளனர்.பிரச்னைகள் என்ன? பெரிய கொல்லபட்டி வழியாக இருக்கன்குடி செல்லும் ரோடு , நீராவி பட்டி செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாறுகால் வசதியில்லாமல் ரோட்டில் கழிநீர் தேங்கி சுகாதாரசீர்கேடு ஏற்படுகிறது. கழிப்பறை வசதி இல்லாமல் வைப்பாற்றின் கரையோரம் சாலை ஓரங்களை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.இதனால் வரும் பன்றிகள் நோய்களை பரப்புகின்றன. இங்கு காலை7 மணி, மாலை4மணி, என இரு முறை மட்டுமே அரசு பஸ் வருவதால், மற்ற நேரங்களில் பாதிக்கின்றனர்.ஊராட்சி மக்கள் சொல்வதென்ன?வி.கார்மேகசாமி: பெரிய கொல்லபட்டி ரோடுகள் மோசமாகவுள்ளது.கழிவு நீர் செல்ல வழியின்றி ரோட்டில் தேங்குகிறது.சாத்தூர் வைப்பாற்றில் போடப்பட்ட உறைகிணறு இடிந்து விட்டது. இதனால் உப்பு தண்ணீர் தான் குழாய்களில் வருகிறது.தெருவிளக்குகள் எரியவில்லை.மின்கம்பம் இருந்தும் விளக்குகள் இல்லை.இரவு நேரத்தில் பாம்பு, பல்லிகள் இருப்பது கூட தெரியாது நடந்து செல்ல வேண்டி உள்ளது.திருமண மண்டபம் கட்டி தருவதாக தேர்தலின் போது வாக்குறுதியளித்தனர்.ஆனால் கட்டி தரவில்லை.அனைத்து பகுதிக்கும் சிமென்ட் ரோடு போடுவதாக கூறினர். ஆனால் போடவில்லை. எஸ்.ரமேஷ்: சாக்கடை அள்ள ஆள்வருவதில்லை. சாக்கடையில் குப்பைகள் சேர்ந்து அடைத்து கொள்கிறது.நிரம்பி வழியும் சாக்கடைகளை பன்றிகள் ஆக்கிரமிக்கின்றன. கொசுக்கள் அதிகமாக உள்ளது. கொசு மருந்து அடிக்கவேண்டும்.பெண்களுக்கு கழிப்பறை வசியில்லை.அங்கன்வாடி பள்ளி கட்டடங்கள் செயல்படாமல் உள்ளது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் இல்லை. குழாயில் வரும் தண்ணீர் உப்பாக உள்ளதால் குடம் நீரை ரூ.10 க்கு வாங்குகிறோம். பி.கிருஷ்ணமூர்த்தி: பெரிய கொல்லப்பட்டி ரயில்வே அன்டர்பாஸ் பகுதியில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி விடுவதால், இருசக்கரவாகனம் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.இதனால் சின்னக்கொல்லபட்டி சென்று சாத்தூர் செல்ல நேரிடுகிறது. ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. துப்புரவு பணிக்கென இருவர் மட்டுமே உள்ளனர். பலபள்ளி கட்டடங்கள் மாணவர்கள் இல்லாத நிலையில் வீணாகிறது. கொசு மருந்து அடிக்காமல் கொசு உற்பத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை