உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி மைதானத்தை ஆக்கிரமிக்க முயற்சி சிவகாசியில் நள்ளிரவில் பதட்டம்

பள்ளி மைதானத்தை ஆக்கிரமிக்க முயற்சி சிவகாசியில் நள்ளிரவில் பதட்டம்

சிவகாசி : சிவகாசியில் பள்ளி விளையாட்டு மைதானத்தை, நள்ளிரவில் ஆக்கிரமிக்க முயற்சித்தால் பதட்டம் ஏற்பட்டது . சிவகாசியில் உள்ளதுஅண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் நகராட்சி பள்ளி. இதன் பின்பிறம் உள்ள 11 ஏக்கர் இடம், 50 ஆண்டுகளாக விளையாட்டு மைதானமாக பயன்படுகிறது . இது பல ஆண்டுகளுக்கு முன், மொட்டையாண்டி என்பவரால் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், விளையாட்டு மைதான இடத்தில் உள்ள 3 ஏக்கர் இடம் கருணைமகாராஜன், மொட்டையாண்டிக்கு சொந்தமானது எனக்கூறி 1997ல் பட்டா பெற்றனர். பட்டா பெற்ற இடத்திற்கு, காங்., நகர தலைவர் ராஜபாண்டியன் பவர் பெற்று, பிளாட்டுகளாக விற்க ஏற்பாடு செய்தார். இதற்கு நகரமைப்பு துணை இயக்குனரிடம் அனுமதி கோர, அவர் மறுத்தார். இதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன் , மைதான உபகரணங்களை அகற்ற முயற்சித்த போது, மாணவர்கள் எதிர்த்ததால் திரும்பினர். இதனிடையே, நேற்று நள்ளிரவில் , விளையாட்டு மைதான கால்பந்து இரும்பு கம்பங்களை அகற்றி, மைதானத்தை டிராக்டரில் உழுதனர். இதை அறிந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் இளைஞர் காங்., பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருகோஷ்டியாக மோதும் சூழ்நிலை ஏற்பட, திடீர் பதட்டம் உருவானது. இன்ஸ்பெக்டர் புரு÷ஷாத்தமன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தாசில்தார் ராமச்சந்திரன், ''இரவில் எந்த பணியும் செய்ய வேண்டாம். அமைதி கூட்டம் நடத்தி தீர்வு கண்டபின் வேலை செய்யலாம்,'' எனகூறி, இருதரப்பினரையும் வெளியேற்றினார். அந்த இடத்தில் தலையாரியை காவலுக்கு வைத்தனர்.இந்நிலையில், விளையாட்டு மைதானத்தை பிளாட்போடுவதை கண்டித்து முன்னாள் மாணவர்கள், பள்ளி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். போலீசார் எச்சரிக்கையால் போராட்டத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ