| ADDED : செப் 21, 2011 11:28 PM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 12லட்சத்து70 ஆயிரத்து 461 வாக்காளர்கள் உள்ள நிலையில்,பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக 11 ஒன்றிய பகுதிகளில் 2045 ஓட்டுசாவடிகள், நகராட்சி பகுதியில் 409 ஓட்டு சாவடிகள், பேரூராட்சி பகுதியில் 152 ஓட்டுசாவடிகள் என 2606 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தலா 197 ஓட்டு சாவடிகள் ஆண், பெண் வாக்காளர்களும், 2212 ஓட்டு சாவடிகள் அனைத்து வாக்காளர்களும் ஓட்டளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.ஒன்றிய பகுதியில் 4லட்சத்து 6458 ஆண் வாக்காளர்கள், 4லட்சத்து 13 ஆயிரத்து 429 பெண் வாக்காளர்கள் என, 8 லட்சத்து19 ஆயிரத்து 887 வாக்காளர்கள் உள்ளனர். நகராட்சி பகுதியில் 2 லட்சத்து23 ஆயிரத்து 14 ஆண் வாக்காளர்கள், 2லட்சத்து27ஆயரத்து560 பெண் வாக்காளர்கள் என 4லட்சத்து 50 ஆயிரத்து 574 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் 6லட்சத்து40 ஆயிரத்து 989 பெண் வாக்காளர்கள், 6லட்சத்து 29 ஆயிரத்து 472 ஆண் வாக்காளர்கள் என ,12லட்சத்து70 ஆயிரத்து 461 வாக்காளர்கள் உள்ளனர்.இதில் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.''வாக்காளர் பட்டியலானது , அங்கிகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக,'' கலெக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார்.