உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராஜபாளையம்-தென்காசி ரோடு போக்குவரத்தில் டி.பி. மில்ஸ் ரோடு அடைக்கப்பட்டதால் அவதி

ராஜபாளையம்-தென்காசி ரோடு போக்குவரத்தில் டி.பி. மில்ஸ் ரோடு அடைக்கப்பட்டதால் அவதி

ராஜபாளையம் : போக்குவரத்து பிரச்னை உள்ள ராஜபாளையம்-தென்காசி ரோட்டில், வெளியூர் பஸ்களை அனுமதிப்பதால் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மேலும் , டி.பி. மில்ஸ் ரோடு அடைக்கப்பட்டதால் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் தவிக்கின்றனர். ராஜபாளையம்-தென்காசி ரோட்டில் அரசு பிரசவ ஆஸ்பத்திரி உட்பட அரசு மற்றும் தனியார் வங்கிகள், கடைகள் உள்ளன. காலை, மாலையில் பள்ளி,கல்லூரி நேரத்தில் ரோட்டை கடக்க 15 முதல் 30 நிமிடங்கள் ஆகும். ரோட்டின் இருபுறமும் உள்ள வர்த்தக நிறுவனங்களின் முன் , சில இடங்களை தவிர, மற்ற இடங்களில் பார்க்கிங் வசதி இல்லை. நகரின் முன்னேற்றத்தை கருத்தில் கொள்ளாமல், பார்க்கிங் வசதி இல்லாத வணிக நிறுவனங்களுக்கும் நகராட்சி அனுமதி அளித்து உள்ளது. இந்த நிறுவனங்களுக்கு வரும் கார், டூ-வீலர்கள் ரோட்டில் நிறுத்துவதால் போக்குவரத்து சிக்கல் ஏற்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராஜபாளையம் புதிய பஸ்ஸ்டாண்ட் வரும் வெளியூர் பஸ்கள், டி.பி.,மில்ஸ் ரோட்டில் செல்வது வழக்கம். கடந்த வாரம் ராஜபாளையத்தில் சிலை உடைப்பு சம்பவம் நடந்தததால், டி.பி. மில்ஸ் ரோடு அடைக்கப்பட்டு, வெளியூர் பஸ் போக்குவரத்து தென்காசி ரோட்டிற்கு மாற்றப்பட்டது. இதனால் ஏற்கனவே போக்குவரத்து பிரச்னை உள்ள தென்காசி ரோட்டில் ,மேலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த ரோட்டில் கார், ஆட்டோ நிற்க தடை விதிக்கவேண்டும். டூ வீலர்களை ஒரே பக்கமாக நிறுத்தவும், ரோடு அருகே உள்ள கடை ஆக்கிரமிப்பை அகற்ற போலீஸ் மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி