உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வரதட்சணை கொடுமை: மூன்று பேர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை: மூன்று பேர் மீது வழக்கு

அருப்புக்கோட்டை:மதுரை பி.பி., ராஜன் ரோடு தெருவை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (31), இவருக்கும் அருப்புக்கோட்டை குலசேகரநல்லூரை சேர்ந்த ரமேஸ் (41) க்கும் கடந்த 2008 ல் திருமணம் நடந்தது. ரமேஷ் சிங்கபூரில் வேலை பார்த்து வருகிறார். திருமணத்திற்கு 150 பவுன் நகை மற்றும் 10 லட்சம் பணம் கொடுத்துள்ளனர். இந்நிலையில், ரமேஷ் வேறு நாட்டிற்கு சென்று வேலை செய்ய 20 லட்சம் பணம் கொண்டு வரும்படி வற்புறுத்தினர். கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், பணம் கேட்டு கணவன் மற்றும் மாமனார் செந்தில்நாதன், மாமியார் ஜெயந்தி ஆகியோர் கொடுமைப்படுத்துவதாக அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் உமாமகேஸ்வரி புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி