மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
11 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
11 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மீனாட்சிபுரத்தில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது பூவாணி ஊராட்சி. இவ்வூராட்சிக்குட்பட்ட மீனாட்சிபுரம், கொளுஞ்சிப்பட்டி, ஆதி திராவிடர் காலனி பகுதிகளுக்கு, கடந்த வாரம் வரை ஒரு நாள்விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றியதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த நான்கு நாள்களாக இப்பகுதியில் குடிநீர் வழங்கப்படவில்லை. தனியார் கிணறு, ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள அடிபம்புகளில் தண்ணீர் பிடிக்கின்றனர். இதை தடுக்க, அப்பகுதியில் கூடுதல் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டுமென அப்பகுதியினர் விரும்புகின்றனர்.
11 hour(s) ago
11 hour(s) ago