மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
13 minutes ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
14 minutes ago
ராஜபாளையம்:போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்காததால், ராஜபாளையம் முடங்கியார் ரோட்டில் ஷேர் ஆட்டோ, மினிபஸ்களால் போக்குவரத்து சிக்கல் அதிகரித்து வருகிறது.முடங்கியார் ரோட்டில் தனியார் மார்க்கெட், உழவர் சந்தை, இரண்டு அரசு வங்கிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளன. அதே ரோட்டில் தீயணைப்பு நிலையம், தாலுகா அலுவலகம் உள்ளன. பள்ளி, கல்லூரி நேரங்களில் ஷேர் ஆட்டோ மற்றும் மினிபஸ்கள் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால், போக்குவரத்து பாதிக்கிறது. தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் அவசரமாக இந்த ரோட்டில் செல்ல முடியவில்லை. அவசர காலத்தில் சைரன் உடன் செல்லும் வாகனத்திற்கு பாதை கொடுக்காமல் போக்குவரத்து விதி மீறல்கள் நடக்கின்றன. கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எச்சரிக்கையை ஆட்டோ, மினிபஸ் டிரைவர்கள் கண்டுகொள்வதில்லை. போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து இப்பகுதி போக்குவரத்து நெரிசலை குறைக்கவேண்டும்.
13 minutes ago
14 minutes ago