உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வெங்காயம் விலை குறைவால் விவசாயிகள் பாதிப்பு மழையில்லாததால் உற்பத்தியும் குறைந்தது

வெங்காயம் விலை குறைவால் விவசாயிகள் பாதிப்பு மழையில்லாததால் உற்பத்தியும் குறைந்தது

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மழையில்லாமல் விளைச்சலும் குறைந்து, விலையும் குறைந்ததால், வெங்காயம் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று பகுதிகளில் கடந்த மே மாதம் வெங்காயம் நடவு செய்தனர். தற்போது அறுவடை நடந்து வருகிறது. மழை பெய்யாததால், கிணற்று நீரை கொண்டு விளைய வைத்தனர். இந்நிலையில், போதிய விளைச்சல் இல்லாததால், மகசூலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறைவான வெங்காயம் கிடைத்தாலும், அதற்கேற்ற விலை இல்லை. பயிரிட வாங்கிய கடனுக்காக, குறைந்த விலைக்கே விற்பனை செய்கின்றனர். ஒரு சில விவசாயிகள் மட்டும், மழைக்காலங்களில் அதிக விலை கிடைக்கும் என்பதால் இருப்பு வைத்து உள்ளனர். விவசாயி அய்யனார் கூறியதாவது: கிலோ ரூ. 38 கொடுத்து விதை வாங்கி நடவு செய்தேன். மழை பெய்தால் ஏக்கருக்கு 110 மூடை வெங்காயம் கிடைக்கும். மழை பெய்யாததால் 60 மூடை தான் கிடைத்தது. விலையிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ 10 ரூபாய்க்குதான் கொள் முதல் செய்கின்றனர் , என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ