உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வயதை குறிப்பிடாத 31 பேர் வேட்பு மனுக்கள் தள்ளுபடி : தேர்தல் அலுவலரை முற்றுகை

வயதை குறிப்பிடாத 31 பேர் வேட்பு மனுக்கள் தள்ளுபடி : தேர்தல் அலுவலரை முற்றுகை

விருதுநகர் : விருதுநகர் கூரைக்குண்டு ஊராட்சியில், வார்டு உறுப்பினருக்கு வேட்பு மனு செய்த 31 பேர் மனுக்கள், வயதை குறிப்பிடாததால் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆத்திரமுற்ற அவர்கள், தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டனர். விருதுநகர் ஒன்றியம் கூரைக்குண்டு ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதற்கு 120 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். பரிசீலனையின்போது, 31 வேட்பு மனுக்களில் வயது நிரப்பப்படாமல் இருந்ததால், அவற்றை உதவி தேர்தல் அலுவலர் மாரியப்பன் தள்ளுபடி செய்தார்.வேட்பு மனு விண்ணப்பத்தில், சின்னங்கள் குறித்து ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் நிரப்ப தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை, தவறாக புரிந்து கொண்ட 31 வேட்பாளர்கள், வயதை குறிப்பிடாமல் விட்டுள்ளனர். இதனாலே அம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் ஆத்திரமடைந்த அவர்கள், ஒன்றிய தேர்தல் அலுவலர் பூங்கோதையை முற்றுகையிட்டனர். வேட்பு மனுவில் உள்ள விபரங்களை அவர் விளக்கி கூறியதால், சமரசமடைந்து திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை