மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
8 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
8 hour(s) ago
வெம்பக்கோட்டை : ''கிராமங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டர் கிடைக்க ஏற்பாடு செய்வேன்,'' என, வெம்பக்கோட்டை ஒன்றியம் மாவட்ட ஊராட்சி 18வது வார்டு கவுன்சிலர் அ.தி.மு.க., வேட்பாளர் சுப்ரமணியன் கூறினார்.வெம்பக்கோட்டை ஒன்றியம் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் 18வது வார்டில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் சுப்ரமணியன் கூறியதாவது:என்னை வெற்றி பெற செய்தால், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமார் உதவியுடன் ,இப்பகுதி மக்களுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். பசுமை கிராம திட்டத்தின் கீழ் வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச வீடு கட்டித் தர முயற்சி செய்வேன். முதியோர் பென்சன் அனைத்து ஏழைகளுக்கும் கிடைக்கவும்,குடிநீர் பிரச்சனையை முற்றிலும் அகற்றி அனைத்து கிராமங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டர் கிடைக்கவும்,கிராம சாலைகளை மேம்படுத்தவும் ,அனைத்து கிராமங்களிலும் மகளிர் சுகாதார வளாகங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். இரவார்பட்டியிலிருந்து அச்Œங்குளம் வரையிலான @ராடை @மம்படுத்தி, பாலம் அமைக்கப்படும்.நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த கசிவு நீர் குட்டைகள் அமைக்கவும்,மானூர் குடிநீர் திட்டத்தை அனைத்து கிராமங்களுக்கு விரிவுபடுத்தவும்,விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் கிடைக்கவும், இப்பகுதியில் உள்ள பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். வெம்பக்கோட்டையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமையவும்,ஏழாயிரம்பண்ணை கால்நடை மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டவும், அரசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.ஒன்றிய செயலாளர் மணிகண்டன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் குருசாமி,ராஜேந்திரன்,ஜெ பேரவை துணைச் செயலாளர் ராஜீ,இளைஞரணி செயலாளர் காசித்துரைப்பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் அருணாசலம்,கட்சி பிரமுகர்கள் சங்கர்ராஜ்,பாஸ்கரன்,கனகராஜ் கலந்து கொண்டனர்.
8 hour(s) ago
8 hour(s) ago