சாத்துார் : சாத்துார் ஊராட்சி ஒன்றியம் சடையம்பட்டியில் ஊருணியில் சேரும் கழிவு நீர், ரோடு, வாறுகால், கழிப்பறை வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.சடையம்பட்டி ஊராட்சியில் தீப்பெட்டிஆலை, அட்டைக் கம்பெனிகள் அதிகளவில் உள்ளது. சிறிதளவு விவசாயமும் நடைபெறுகிறது. இப்பகுதியினர் பலர் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு செல்கின்றனர்.நடுத்தர மக்கள் அதிக அளவில் வசிக்கும் சடையம்பட்டி ஊராட்சியில் சிறிய தெருக்களில் ரோடு வாறுகால் வசதி இல்லை. மேலும் ஊராட்சியின் நடுவில் உள்ள ஊரணியில் குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் கலந்து வருகிறது. இதனால் ஊரணி முழுவதும் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசும் நிலையில் உள்ளது.இ. சேவை மையகட்டடம், நுாலக கட்டடங்கள் கட்டப்பட்டும் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொது கழிப்பறை வசதி இல்லை. பெரும்பாலானவர்கள் திறந்தவெளியை நாடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.குப்பைகளை துப்புரவு தொழிலாளர்கள் ரோட்டின் ஓரத்தில் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் எழும் புகை குடியிருப்புக்குள் புகுந்து இருமல் மூச்சு திணறல் என பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை உள்ளது.பயணிகள் நிழற்குடை தேவைசடையம்பட்டியில் பயணிகள் நிழற்குடை இல்லை. வெளியூர் செல்லும் பயணிகள் வெயிலில் காத்திருந்து பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளது. கர்ப்பிணிகள், முதியவர்கள் மாற்று திறனாளிகள் கோடை வெயிலால் சிரமப்படுகின்றனர். பயணிகள் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.சண்முகம், குடும்பத் தலைவர் .ஊரணியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்ஊரின் மத்தியில் உள்ள ஊரணியில் குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் கலந்து வருகிறது. இதன் காரணமாக கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது இரவில் மட்டுமின்றி பகலிலும் கொசுக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனர் ஊரணியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து ஊருக்கு வெளியே கொண்டு விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.பால்பாண்டி, குடும்பத் தலைவர் .ரோடு,வாறுகால் வசதிசடையம்பட்டி அருந்ததியர் காலனி தெருவில் ரோடு வாறுகால் வசதி இல்லை. குண்டும் குழியுமாக ரோடு உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வாறுகால் துார்ந்து போன நிலையில் உள்ளது. இதனால் கழிவு நீர் பாதையில் தேங்குகிறது. வாறுகால்கட்டவும், ரோடு போட வேண்டும்.பாண்டியன், குடும்பத் தலைவர் .சாத்துார், ஏப்.13-சாத்துார் ஊராட்சி ஒன்றியம் சடையம்பட்டியில் ஊருணியில் சேரும் கழிவு நீர், ரோடு, வாறுகால், கழிப்பறை வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.சடையம்பட்டி ஊராட்சியில் தீப்பெட்டிஆலை, அட்டைக் கம்பெனிகள் அதிகளவில் உள்ளது. சிறிதளவு விவசாயமும் நடைபெறுகிறது. இப்பகுதியினர் பலர் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு செல்கின்றனர்.நடுத்தர மக்கள் அதிக அளவில் வசிக்கும் சடையம்பட்டி ஊராட்சியில் சிறிய தெருக்களில் ரோடு வாறுகால் வசதி இல்லை. மேலும் ஊராட்சியின் நடுவில் உள்ள ஊரணியில் குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் கலந்து வருகிறது. இதனால் ஊரணி முழுவதும் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசும் நிலையில் உள்ளது.இ.சேவை மையகட்டடம், நுாலக கட்டடங்கள் கட்டப்பட்டும் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொது கழிப்பறை வசதி இல்லை. பெரும்பாலானவர்கள் திறந்தவெளியை நாடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.குப்பைகளை துப்புரவு தொழிலாளர்கள் ரோட்டின் ஓரத்தில் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் எழும் புகை குடியிருப்புக்குள் புகுந்து இருமல் மூச்சு திணறல் என பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை உள்ளது. பயணிகள்நிழற்கு டை தேவை
சண்முகம், குடும்பத் தலைவர்: சடையம்பட்டியில் பயணிகள் நிழற்குடை இல்லை. வெளியூர் செல்லும் பயணிகள் வெயிலில் காத்திருந்து பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளது. கர்ப்பிணிகள், முதியவர்கள் மாற்று திறனாளிகள் கோடை வெயிலால் சிரமப்படுகின்றனர். பயணிகள் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊர ணியி ல் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்
பால்பாண்டி, குடும்பத் தலைவர்: ஊரின் மத்தியில் உள்ள ஊரணியில் குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் கலந்து வருகிறது. இதன் காரணமாக கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது இரவில் மட்டுமின்றி பகலிலும் கொசுக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனர் ஊரணியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து ஊருக்கு வெளியே கொண்டு விட நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோடு,வாறுகால் வசதி
பாண்டியன், குடும்பத் தலைவர்: சடையம்பட்டி அருந்ததியர் காலனி தெருவில் ரோடு வாறுகால் வசதி இல்லை. குண்டும் குழியுமாக ரோடு உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வாறுகால் துார்ந்து போன நிலையில் உள்ளது. இதனால் கழிவு நீர் பாதையில் தேங்குகிறது. வாறுகால்கட்டவும், ரோடு போட வேண்டும்.