வெங்கடாஜலபுரத்தில் குழாய் உடைந்து வீணாகிறது குடிநீர்
சாத்துார்: சாத்துார் வெங்கடாஜல புரம் எம்.ஜி.ஓ.காலனியில் குடிநீர் பகிர்மான குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதால் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். வெங்கடாஜலம் ஊராட்சிக்கு உட்பட்ட என் .ஜி . ஓ. காலனிக்கு இருக்கன்குடி அணையில் இருந்தும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அப்பகுதி மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து வீடுகளுக்கு செல்லும் குடிநீர் பகிர்மான குழாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இந்த தண்ணீர் முழு வதும் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடி அப் பகுதியில் உள்ள காலி நிலத்தில் தேங்கி வருகிறது. இதனால் மக்களும், வாகன ஓட்டி களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.