உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் பருத்தியில் களை எடுக்கும் பணி தீவிரம்

சிவகாசியில் பருத்தியில் களை எடுக்கும் பணி தீவிரம்

சிவகாசி, மார்ச் 28-சிவகாசி அருகே செவலுார், எரிச்சநத்தம் பகுதியில் பருத்திக்கு களை எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.சிவகாசி அருகே செவலுார், எரிச்சநத்தம், கிருஷ்ணம நாயக்கன்பட்டி, சித்தம நாயக்கன்பட்டி புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளம் பருத்தி நெல் முக்கிய பயிராக உள்ளது. கிணற்று பாசனத்தில் பருத்தியை ஆண்டுக்கு இருமுறை சாகுபடி செய்கின்றனர். இரு மாதத்திற்கு முன்பு பருத்தி அறுவடை முடிந்த நிலையில் மீண்டும் இப்பகுதியில் 150 ஏக்கருக்கு மேல் ஒரு மாதத்திற்கு முன்பு பருத்தி விதைத்துள்ளனர்.உழவு, விதைத்தல், களை எடுத்தல், மருந்து தெளித்தல் என ஒரு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் வரை செலவாகிறது. கடந்த முறை ஏக்கருக்கு 8 குவிண்டால் வரை பஞ்சு கிடைத்த நிலையில் கிலோ 60 ரூபாய் மட்டுமே விலை கிடைத்தது. இதனால் பெரிய அளவில் லாபம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இன்றி விவசாயிகள் தப்பித்தனர். இந்த முறை பஞ்சு கிலோ ரூபாய் 100க்கு விலை போனால் நல்ல லாபம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.பாண்டியம்மாள், விவசாயி, செவலுார், ஆண்டுக்கு இருமுறை கிணற்று பாசனத்தில் பருத்தி சாகுபடி செய்கின்றோம். நல்ல விலை கிடைக்காததால் லாபம் கிடைப்பதில்லை. எனவே இந்த முறையாவது பஞ்சு கிலோ 100 ரூபாய்க்கு விலை போனால் நல்ல லாபம் கிடைக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ