உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்

காரியாபட்டி: காரியாபட்டியில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. ரூ ஒரு கோடியே 5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கி, பேசியதாவது:கம்பிக்குடி கால்வாய் திட்டத்தில் 18 கி. மீ., நீளத்திற்கு தனியாக கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. திட்டம் நிறைவேறும் பட்சத்தில் வைகை தண்ணீர் நேரடியாக கிடைக்கப் பெற்று, விவசாயம், குடிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி