உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சொந்த கட்டடம் இல்லை; தவிக்கும் மகளிர் போலீசார்

சொந்த கட்டடம் இல்லை; தவிக்கும் மகளிர் போலீசார்

ஸ்ரீவில்லிபுத்துார்: -ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சொந்த கட்டடம் இல்லாமல் டவுன் போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தின் மேல் மாடியில் சிரமத்திற்கு மத்தியில் பெண் போலீசார் பணியாற்றி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் மதுவிலக்கு, மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகிறது. இதில் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு என சொந்த கட்டடம் கட்டப்பட்டதால் பழைய கட்டடத்தில் மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வருகிறது. இந்நிலையில் இதே வளாகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மகளிர் போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் சேதமடைந்து காணப்பட்டதால் தற்போது டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புதிய கட்டடத்தின் மாடியில் இயங்கி வருகிறது. இதனால் பெண் போலீசார்களும், மக்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, பழைய கட்டடத்தை இடித்து விட்டு புதிதாக மகளிர் போலீஸ் ஸ்டேஷன் கட்டி தர வேண்டும் என போலீசாரும், மக்களும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி