உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மனநலம் குன்றிய 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி பஞ்சாண்டி 51, என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. காரியாபட்டி ஆவியூரைச் சேர்ந்தவர் பஞ்சாண்டி. இவர் 2023ல் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ 10 லட்சம் இழப்பீடு மாவட்ட நிர்வாகம் வழங்க, கலெக்டருக்கு பரிந்துரை செய்தும் நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துமாரி ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ