மேலும் செய்திகள்
முதலமைச்சர் கோப்பை:கால்பந்து போட்டி துவக்கம்
01-Sep-2025
விருதுநகர்: விருதுநகர் அருகே குல்லுார்சந்தையில் ரூ.500 கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி நாகராஜ் 27, கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கந்த சாமியை 22, சூலக்கரை போலீசார் கைது செய்தனர். குல்லுார்சந்தை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் நேற்று காலை 7:30 மணிக்கு அணைக்கட்டு கால்வாய் பாலத்திற்கு அருகே தலையில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். இவரது உடலை போலீசார் கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசாரின் விசாரணையில் நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு நாகராஜ், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி, சிலர் சம்பவயிடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இதில் நாகராஜ், கந்தசாமி இடையே ரூ.500 கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டது. இதில் நாகராஜை கந்தசாமி கொலை செய்தது தெரிந்தது. கந்தசாமியை போலீசார் கைது செய்தனர்.
01-Sep-2025